• Nov 02 2024

TVK தலைவர் விஜய் போட்ட டுவிட்... விமானப்படை சாகச நிகழ்வில் நடந்த விபரீதம்...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. என்றாலும் நிகழ்ச்சிக்கு வந்து செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதி மற்றும் முறையான திட்டமிடல் இல்லாதததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பலர் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


மேலும் இதில் சிலர் மரணமடைந்தனர். இந்த சோகமான நிகழ்வினை முன்னிட்டு tvk தலைவர் தளபதி விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.


இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 


Advertisement

Advertisement