• Jan 28 2026

குக் வித் கோமாளி சீசன் 5ல் இன்றைய அவுட் விக்கெட் யாரு தெரியுமா? கண்ணீரோடு வெளியேறிய சோகம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு. இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் கலகலப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை சீசனில் நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜன், தாமு ஆகியோர் காணப்படுகிறார்கள்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 இன் 18வது வாரத்தில் எலிமினேஷன் நடைபெற்று உள்ளது. இதனால் வெளியேருவது யாரென அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.


அதன்படி, இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியாணி டாஸ்கில் சரியாக சமைக்காத அக்ஷய் கமல், பூஜா மற்றும் வசந்த வசி ஆகியோர் எலிமினேஷன் போட்டிக்கு தேர்வாகினர்.

இதில் வசந்த் வசி சரியாக சமைக்கவில்லை என செஃப் தாமு அவரை  எலிமினேட் செய்தார்.  இதனால் அவர் கண்ணீரோடு வெளியே சென்றுள்ளார்.


Advertisement

Advertisement