• Jun 28 2024

MR and Mrs சின்னத்திரை சீசன் 5 ஆரம்பம்.. ஜட்ஜ் தேவதர்ஷினி நீக்கமா?

Sivalingam / 4 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்பதும் நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. 

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி 2020, 2021 மற்றும் 2022 என நான்கு சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ளன. 2023 ஆம் ஆண்டு மட்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை என்ற நிலையில் இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாக தகவல் வழியாக உள்ளன.

இன்றுடன் சூப்பர் சிங்கர் சீசன் 10 முடிந்துவிட்டதால் அடுத்த வாரம் முதல் அதாவது வரும் சனிக்கிழமை முதல் சனி, ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த சீசனை கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி நடுவர்களாக இருந்த நிலையில் இந்த சீசனில் தேவதர்ஷினி இல்லை என்றும் அவருக்கு பதிலாக நடிகை ராதா நடுவர்களில் ஒருவராக கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோபிநாத் மற்றும் ராதா ஆகிய இருவரும் நடுவர்களாக இருக்கும் இந்த சீசன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் நிஷா தொகுத்து வழங்கவுள்ளனர்.

மேலும் இந்த சீசனின் போட்டியாளர்களாக பெரும்பாலும் விஜய் டிவி பிரபலங்களாகத்தான் இருக்கும் என்றும் குறிப்பாக புகழ் மற்றும் அவரது மனைவி இந்த சீசனில் கலந்து கொள்வது உறுதி என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. மற்ற நான்கு சீசன்கள் போலவே இந்த சீசனும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement