• Mar 26 2026

டிக் டாக் பிரபலம் அமலா ஷாஜிக்கு அடித்த ஜாக்போர்ட் ..! டிராகன் பட நடிகையுடன் முதல் கூட்டணி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்கள் சினிமாவில் அறிமுகமாகுவது தற்போது சாதாரண ஒன்றாக மாறியுள்ளது. யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற தளங்களின் மூலம் புகழ் பெற்ற பலர், சிறிய திரையிலிருந்து வெள்ளித்திரை வரை தங்களது இடத்தை உறுதி செய்து வருகின்றனர்.

அந்த வகையில், டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து, திவாகர், கலையரசன், அரோரா உள்ளிட்டோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளனர்.

அதே வரிசையில், டிக் டாக்கில் தனது இயல்பான நடிப்பாலும் வெளிப்பாட்டாலும் பலரது மனதை கவர்ந்த அமலா ஷாஜியும் தற்போது கவனம் பெறும் சமூக வலைத்தள பிரபலமாக உள்ளார். பல ஆண்டுகளாக டிக் டாக் தளத்தில் செயல்பட்டு வரும் அவர், தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இந்த நிலையில், அமலா ஷாஜி பிரபல நடிகை கயாது லோஹவுடன் இணைந்து புதிய பாடல் ஒன்றில் நடித்துள்ளார். ‘காட்டு செம்பகம்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த பாடல், வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. 


இதனை அமலா ஷாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளதுடன்,  காணொளி ஒன்றையையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் அளித்துள்ளார். அந்த காணொளியில் பிரபல நடிகை கயாது லோஹர் இடம்பெற்றிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இருந்து சினிமா வரை தன்னுடைய திறமையால் முன்னேறி வரும் அமலா ஷாஜிக்கு, தற்போது ரசிகர்களும் இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement