தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் மிருணாள் தாகூர். இவர் தமிழில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். சமீபத்தில் தனுஷுக்கும் இவருக்கும் இடையில் பல வதந்திகள் கிளம்பின.
இந்த நிலையில், தனுசுடன் தன்னை பற்றி இணைத்து வதந்திகளை பரப்பியவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்ட கருத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி அவர் கூறுகையில், எனக்கு தனுஷுக்கும் பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் என வதந்திகளை எப்படி பரப்பினார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் கூறியபடி எனக்கு இந்த நேரம் திருமணம் நடந்திருக்க வேண்டும்.

நான் அவரோட தேரே இஷ்க் மே படத்தின் நிகழ்ச்சிக்கு சென்ற போது இருவரும் சந்தித்து பேசிய காட்சிகளை வைத்து தான் இப்படி வதந்திகளை பரப்பினர். எனக்கு இதுவரை தனிப்பட்ட முறையில் பி ஆர் டீம் கிடையாது. என்னோட வீட்டு அட்ரஸ் கூட இப்ப பப்ளிக்கா மாறிடுச்சு.
அதையெல்லாம் சரி செய்வதற்கு ஒரு பி ஆர் டீம் விரைவில் அமைக்க உள்ளேன். சத்தியமா சொல்லுறேன் மூன்று கோடி, ஆறு கோடி, ஏன் 10 கோடி கொடுத்தாலும் கூட இப்படி ஒரு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது. தனுசுடன் இணைத்து வதந்திகளை பரப்பியவர்களுக்கு உண்மையாவே நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
Listen News!