நடிகர் ஜீவா நடிப்பில் நிதிஷ் சகாதேவ் இயக்கிய 'தலைவர் தம்பி தலைமையில்' என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் காமெடி காட்சிகளும் புதுமையான கதைக்களமும் ரசிகர்களை ஈர்த்ததால் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. முதல் நாளை விட இரண்டாம் நாள் இரு மடங்கு வசூல் கிடைத்ததாகவும் பல திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஆகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியால் 2026 ஆம் ஆண்டின் முதல் வசூல் வெற்றி படமாக உறுதியானதால் படக் குழுவினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
இந்த படம், டிக்கெட் முன்பதிவிலேயே நல்ல சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற திரையரங்குகளிலும் TTT படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படத்தைப் பற்றி நேர்மறை விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடிக்கும் வசூல் செய்துள்ளது. படத்தை பார்த்த பலர் இது ஜீவா பொங்கல் என படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Listen News!