பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பத்தில் சலிப்பாக காணப்பட்டாலும் வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு பிறகு சூடு பிடித்தது. அதிலும் இறுதியாக இடம்பெற்ற ரெட் கார்ட் விவகாரம் டிஆர்பியை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இந்த சீசனில் பார்வதி மற்றும் கமருதீன் இறுதியாக நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கின் போது சாண்ட்ராவை தள்ளிய சம்பவத்தில், இருவரும் விதிமீறல் செய்ததாகக் கூறி ‘ரெட் கார்டு’ வழங்கப்பட்டு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த முடிவு ரசிகர்களிடையே கலவையான கருத்துகளை உருவாக்கியது. ஒரு தரப்பு, நிகழ்ச்சியின் விதிகளை மீறியதற்கு சரியான தண்டனை என பாராட்டிய நிலையில், இன்னொரு தரப்பு இது சாண்ட்ராவின் நடிப்பு, அவர் வேண்டும் என்றுதான் இவ்வாறு செய்தார் எனவும் விமர்சித்தனர்.

அது மட்டும் இல்லாமல் இந்த சீசனின் உண்மையான வெற்றியாளர் பார்வதி தான். அவர்தான் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடினார் என்று அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பார்வதி கலந்துகொண்டு உருக்கமாக பேசியது கவனம் பெற்றது. அவர் சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டதுடன், பிக் பாஸ் வீடு தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என கூறினார். இதையடுத்து, பார்வதி – கமருதீன் விவகாரம் சீசன் 9ன் முக்கிய திருப்பங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பார்வதியும் கமருதீன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் இருவரும் கறுப்பு நிற ஆடையில் காணப்படுகின்றனர்.
Listen News!