தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக தனக்கான தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி ஹீரோவாக திகழ்ந்து வருபவர் அக்ஷய் குமார். இவர் 90 ஆம் ஆண்டுகளில் நடிக்க வந்ததிலிருந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஷாருக்கான், அமீர்கான் என பல நடிகர்களுக்கு போட்டியாக இன்றும் தனக்கென தனி மார்க்கெட் தக்க வைத்துள்ளார்.
இவர் ட்விங்கிள் கண்ணாவை திருமணம் செய்தார். அவருக்கு ஒரு மகன் இருக்கின்றார். ஆனால் அவர்களுக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை என்றே தோன்றுகின்றது. இப்போதும் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அக்ஷய் குமார், சமீபத்தில் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தார்.
இந்த நிலையில், நடிகர் அக்ஷய் குமார் தனது குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலாவை முடித்து மும்பை திரும்பிய நிலையில், அவருடைய கார் ஆட்டோ ரிக்ஷாவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூஹூவில் உள்ள சில்வர் பீச் கஃபே அருகே இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்வாய்ப்பாக, அக்ஷய் குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!