• Jul 13 2025

மணிவண்ணனிடம் கடன் வாங்கிய சத்தியராஜ்..! - நடந்தது இதுதான்..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னிலை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்தியராஜ். தற்போதும் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார் . இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது நடிகர் மணிவண்ணன் பற்றிக் கூறிய விடயம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அதாவது, தனக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் பெரியாருக்கு கோவையில் சிலை வைப்பதற்கென அன்பு நண்பரும் மறைந்த நடிகருமான மணிவண்ணனிடம் 50,000 ரூபாய் கடனாக பெற்றுக் கொண்டதாகவும், அடுத்த படம் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தவுடன் அந்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும்  அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பான கருத்துக்களை ரசிகர்கள் தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

Advertisement

Advertisement