• Mar 01 2025

ஜெயிலர் 2 இல் சூப்பர் ஸ்டார் நடிக்கவில்லையா..? காரணம் இது தான்...

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

ஜெயிலர் திரைப்பட வெற்றியினை தொடர்ந்து நெல்சன் இதன் பகுதி 2 இணை எடுப்பதற்கு முடிவு செய்துள்ளார். இதன் teaser இணை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு படத்துக்கான மாஸ் அப்டேட் ஒன்றினை வழங்கியிருந்தது. இப் படத்திற்கு வழமை போல் அனிருத் நடித்துள்ளார்.


மற்றும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதுடன் ஹீரோயின் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை ஆனால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் அவருக்கு cancer நோய் ஏற்பட்டமையினால் சத்திரசிகிச்சையின் பின் தான் தமிழில் கமிட்டாகி இருந்த படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறியிருந்தார்.


இந்நிலையில் தற்போது தனது முடிவில் இருந்து அவர் மாறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக படக்குழுவிற்கு மே மாதம் 15 நாட்கள் தேதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்த காலத்திற்குள் அவர் தனது கன்னட படங்களையும் ஆரம்பிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

Advertisement

Advertisement