• Mar 01 2025

"விஜய் தான் உங்க கணவரை விட சிறந்தவர்..." பதிலடி கொடுத்த நடிகை ஜோதிகா...

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

நடிகை ஜோதிகா மற்றும் அவரது கணவர் நடிகர் சூர்யா தற்போது மும்பையில் குடிபெயர்ந்து பல படங்கள் மற்றும் வெப் சீரியல்களில் நடித்து வருகின்றனர். தற்போது ஜோதிகா, 'டப்பா கார்டெல்' என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார் மேலும் அதற்கான ப்ரோமோஷன் நடவடிக்கைகளில் மிகுந்த உழைப்புடன் இருக்கிறார்.


இதைவிட சூர்யா அவர்களும் கங்குவா திரைப்பட தோல்வியின் பின்னர் துவண்டு போகாது மேலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் பல ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கும் முகமாக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகின்றார். சமீபத்தில் குறித்த அகரம் நிறுவனத்தின் பெரிய அலுவலகம் ஒன்றினை தனது சொந்த பணத்தில் கட்டி அதற்கான திறப்பு விழாவினை செய்துள்ளார்.


இந்நிலையில் ஜோதிகா இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்டர் ஒன்றுக்கு ஒரு நெட்டிசன் "விஜய் தான் உங்க கணவரை விட சிறந்தவர்" என்று கருத்து தெரிவித்தார்.இதற்கு ஜோதிகா எதையும் சொல்லாமல் ஒரு எமோஜி பதிலடியாக பதிலளித்துள்ளார்.அவரது எமோஜி பதில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த எமோஜி பதில் தற்போது வைரலாக பரவியுள்ள நிலையில் நெட்டிசன்கள் இதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டு வருகின்றனர். ஜோதிகாவின் இந்த பதிலுக்கு பலரும் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement