• Dec 04 2024

மும்பையில் ஷிப்ட்டாக முக்கிய காரணமே இதுதான்..! உண்மையை போட்டுடைத்த சூர்யா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதன் காரணத்தினால் கங்குவா படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அதன்படி சென்னையில் மட்டும் இல்லாமல் மும்பை, டெல்லி, ஹைதராபாத் என  அடுத்த அடுத்த இடங்களில் ரசிகர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்து வருகின்றார் சூர்யா உள்ளிட்ட படக் குழுவினர்.

சமீபத்தில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் தன்னுடைய வாழ்க்கை குறித்தும் கங்குவா படம் குறித்தும் அடுத்த ப்ராஜெக்ட்டுகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சூர்யாவும் ஜோதிகாவும் மும்பை செட்டில் ஆனதற்கு முக்கிய காரணம் என்னவென்றும் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், ஜோதிகா தன்னுடைய 18 வயது வரை மும்பையில் இருந்ததாகவும் அதன் பின்பு நடிப்பு மற்றும் தனக்காக தான் அவர் சென்னையில் ஆனதாகவும் தெரிவித்தார். 


மேலும் கடந்த 27 ஆண்டுகளாக தனது பெற்றோர், உறவினர், நண்பர்கள் என அனைவரையும் பிரிந்து அவர் வாழ்ந்ததாகவும் சூர்யா கூறியுள்ளார்/ மேலும் ஒரு ஆணுக்குத் தேவைகள் ஆசைகள் இருப்பதைப் போலவே பெண்ணுக்கும் இருக்கும் என்பதை அறிந்தே நானும் மும்பைக்கு செட்டில் ஆனேன் என்று கூறினார்.

மேலும் ஜோதிகாவுக்கு உறவினர்கள், நண்பர்கள், நிதி சுகந்திரம் சுயமரியாதை போன்றவை தேவை என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் தற்போது விரும்பிய இடத்திற்கு ஜோதிகா சென்று வருவதாகவும் குழந்தைகளும் சிறப்பாக கல்வியை பயின்று வருவதாகவும் சூர்யா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement