• Apr 15 2026

என்னோட முதல் தமிழ் படம் இதுதான்.. 'மை லார்ட்' படத்தின் நாயகி எமோஷனல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான  குக்கூ, ஜோக்கர், ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகனின் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் தான் மை லார்ட். இந்த படத்தில் சசிகுமார் நடித்துள்ளதோடு அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் படக்குழுவினர் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பாடல்கள் பாடி, பட வசனங்களை பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இந்த நிலையில், பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் கதாநாயகி சைத்ரா பேசிய  விடயங்கள் தற்போது  இணையத்தில் வைரல் ஆகி உள்ளன. 

அதன்படி அவர் கூறுகையில், இந்தப் படம் எனக்கு மிக மிக இனிமையான அனுபவம். இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். சசிகுமார் ரொம்ப ஜாலியான மனுஷர். அவரோட நடிச்சது ரொம்ப நல்ல அனுபவம், அவருடன் இன்னும் நிறைய படங்கள் நடிக்க எனக்கு ஆசை இருக்கு. 


மேலும் இந்த படம் எனக்கு முதலாவது தமிழ் படம். நான்  பெங்களூரில் இருந்து வரும்போது எனக்கு தமிழே தெரியாது. ஆனால் இந்த படத்தில் இயக்குனர் ராஜூ முருகன்  எனக்கு  தமிழ் பேச கற்றுக் கொடுத்தார். 

இவர்களுடன் பணி ஆற்றியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு சிட்டி பொண்ணை  ஒரு கிராமத்தில் கொண்டு போய்  அழகான கதை இயற்றியுள்ளார்.  எனது அடுத்த படத்தில் இன்னும் அழகாக தமிழ் பேசுவேன் என்று கூறியுள்ளார். 

இதேவேளை அவர் தமிழில் பேசும் போது  எந்த ஒரு  பிழையும் இன்றி சாதாரணமாகவே அவர் பேசியதை பார்த்து பலரும் அவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். 



 

Advertisement

Advertisement