சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி’ தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் ஸ்ருதி மற்றும் எஸ்எஸ்ஆர் ஆர்யன் பிரதான வேடங்களில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த தொடரில், ரிந்தியா, நேஹா மேனன், நித்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த தொடரில் கோகிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை கீர்த்தி விஜய்க்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன், ‘மிஸ்டர் மனைவி’ தொடரில் கவிமலர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி விஜய் மக்கள் மத்தியில் தனித்த அடையாளம் பெற்றார்.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி விஜய்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்புலத்தில் பணியாற்றி வரும் பிரபலமான சாய் கிரிஷ் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமண நிகழ்வில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீர்த்தி விஜய் – சாய் கிரிஷ் தம்பதிக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!