• Apr 15 2026

ஷூட்டிங்கிற்கே அனுப்புவதில்லையாம்.. கெனிஷாவின் கைபொம்மையான ரவி மோகன்..? பிரபலம் பகிர்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  சிறந்த நடிகராகவும், சிறந்த மனிதராகவும் திகழ்ந்தவர் ரவி மோகன். ஆனால் சமீபத்திய செய்திகளில் அவர் ஹெட் லைனாக  காணப்படுகின்றார். அதற்கு காரணம்  ஆர்த்தியுடன் ஏற்பட்ட விவாகரத்துக்கு பிறகு அவர் பாடகி கெனிஷாவுடன் நெருக்கம் காட்டுவது தான். 

ஆரம்பத்தில்  ரவி மோகனின் முதல் மனைவி  ஆர்த்தி,  அவரை கொடுமை பண்ணினார் என்று அவருக்கு எதிராக பல அவதூறு கருத்துக்கள்  பேசப்பட்டன. ஆனால் அதற்குப் பிறகு ரவி ஆர்த்தியை பிரிய முக்கிய காரணமே கெனிஷா தான் என கூறப்பட்டது.  ஆனாலும் தற்போது அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரவி மோகன்  கெனிஷாவுடன்  பொது இடங்களில் கைகோர்த்து வலம்  வருகின்றார். 

மேலும்  கெனிஷாவின் 27 வது பிறந்தநாள் அன்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து  தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். அதற்கு  கெனிஷா மிகவும் உருக்கமான பதிவு ஒன்றையும்  தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


இந்த நிலையில், ரவி மோகன் பற்றி  பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான அந்தணன் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.  அதன்படி அவர் கூறுகையில்  , "ரவி மோகனின் கராத்தே பாபு படம் உண்மையில் நன்றாக வந்திருக்கிறதாம். ஆனால் அதற்கு ரவி முழு ஒத்துழைப்பை கொடுக்கவில்லையாம். அவரை கெனிஷா ஷூட்டிங்கிற்கே அனுப்புவதில்லை என்று சொல்கிறார்கள். 

இன்னும் ரவி மோகனை வைத்து பத்து, பதினைந்து நாட்களுக்கு ஷூட்டிங் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நல்ல படத்துக்கு ஏன் அவர் இப்படி செய்கிறார் என தெரியவில்லை என்றார். 


Advertisement

Advertisement