• Jan 26 2026

ரஞ்சித் இயக்கத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இதுதான்..! மனம் திறந்த மோகன் ஜி

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக திகழும் இயக்குநர் மோகன் ஜி, சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.


சமூக கருத்துகள், அரசியல் பின்னணி மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற இயக்குநர் ரஞ்சித், ஆர்யா நடிப்பில் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படம் வெளியாகிய போது விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப் படம் குறித்து தற்போது இயக்குநர் மோகன் ஜி மனதார பாராட்டியுள்ளார்.

ஒரு பேட்டியில் பேசிய மோகன் ஜி, “இயக்குநர் ரஞ்சித் இயக்கிய படங்களிலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச படம் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை தான். அந்தப் படத்தோட மேக்கிங்கும், அது கொடுத்த எமோஷனும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது” என்று கூறியுள்ளார்.


மேலும் அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆர் காலத்து பாக்ஸிங் அரசியலை அந்தப் படத்தில் காட்டலன்னாலும், அது ரஞ்சித்தோட சினிமா என்பதால நாம அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அவரோட உலகம் வேற. ஆனா, அந்தப் படம் சொல்ல வந்த விஷயம் ரொம்ப நேர்மையானது.” என்று தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு வெளியான ‘சார்பட்டா பரம்பரை’, வெறும் பாக்ஸிங் விளையாட்டை மட்டும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் அல்ல. அது ஒரு சமூகத்தின் மரியாதை, போராட்டம் ஆகியவற்றை உணர்வுபூர்வமாக பதிவு செய்த படம்.

Advertisement

Advertisement