• Jan 26 2026

பிரதீப்பிற்கு குவியும் படவாய்ப்புகள்.. அடுத்த படம் குறித்து வெளியான அப்டேட்.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு வித்தியாசமான இடத்தைப் பிடித்தவர் நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். தனது திறமையை தொடர்ந்து திரையில் நிரூபித்து வரும் பிரதீப், சமீபத்தில் தனது அடுத்த படத்திற்கான திட்டங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.


பிரதீப் ரங்கநாதன் திரையுலகில் முதலில் இயக்குனராக அறிமுகமானவர். அவரது கோமாளி திரைப்படம், சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அவர் இயக்குநராக மட்டுமல்லாமல், கதை சொல்லும் திறமையிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

இயக்குனராக அறிமுகமான பிறகு, பிரதீப் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே ஹீரோவாக நடித்தார். இந்த படமும், பின்னர் தொடர்ந்து வெளியான மற்ற இரண்டு படங்களும் பெரும் வெற்றியை அடைந்தன. பாக்ஸ் ஆஃபீசில் சாதனை படைத்த இந்த திரைப்படங்கள், பிரதீப்பின் நடிப்பு திறமைக்கு உறுதியான ஆதாரமாக அமைந்தன.

பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து LIK படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கான திரை வாழ்க்கையில் முக்கியமான ஒரு கட்டமாக அமைந்தது. இப்படம் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. 


இந்த நிலையில், ரசிகர்கள் பிரதீப்பின் அடுத்த படத்தின் திட்டங்களை ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரும், அடுத்த படத்தை பிரதீப் இயக்கவா அல்லது நடிக்கவா போகிறார் என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர்.

பிரதீப் தற்போது வெளியிட்ட தகவலின் படி, அவர் அடுத்த படத்திலும் ஹீரோவாக தான் நடிக்கவுள்ளார். தற்போது அவரின் அடுத்த படத்தை இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement