• Apr 21 2026

இது வெறும் ஆரம்பம் தான்... இனிமேல் தான் ஆட்டமே.! ரஜினி - கமல் கூட்டணியின் ப்ரோமோ வீடியோ

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தருணம் உருவாகியுள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் படம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று கூட்டணியை இயக்குவது பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.


இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான சில நிமிடங்களிலேயே வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

ப்ரோமோவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நால்வரின் வருகையும் தனித்துவமான காட்சிகளாக அமைந்துள்ளதால், ரசிகர்கள் “இது சாதாரண படம் இல்ல... திரை வரலாறு.” எனக் கூறி வருகின்றனர்.

ரஜினி மற்றும் கமல் இணையும் தருணம் என்பது வெறும் திரைப்பட அறிவிப்பு அல்ல, அது பல தலைமுறைகள் காத்திருந்த ஒரு திருவிழா. இருவரும் தனித்தனி பாதையில் உச்ச நட்சத்திரங்களாக வளர்ந்து, உலகளாவிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர்கள்.

இப்போது, 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரையில் தோன்றுவது தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அத்தியாயமாகவே பார்க்கப்படுகிறது. ப்ரோமோவில் இருவரும் ஒன்றாக காணப்படும் தருணங்கள் ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement