• Mar 20 2026

வெளியானது வரலட்சுமி சரத்குமாரின் 'சரஸ்வதி' பட ட்ரெய்லர்.. குஷியில் ரசிகர்கள்.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள வரலட்சுமி சரத்குமார் தற்போது புதிய அடையாளத்தில் ரசிகர்களை சந்திக்கத் தயாராக உள்ளார். தனது தங்கை பூஜா சரத்குமார் உடன் இணைந்து “Dosa Diaries” எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.


நடிகையாக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்தும் முயற்சியாக “Dosa Diaries” நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள படம் தான் சரஸ்வதி.

“சரஸ்வதி” திரைப்படத்தை வரலட்சுமி சரத்குமார் தானே இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மேலும், நவீன் சந்திரா, நடிகை பிரியாமணி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர்.

திரைப்படத்திற்கு இசையை பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன் வழங்கியுள்ளார். இந்நிலையில், “சரஸ்வதி” திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement