90ஸ் கிட்ஸ் பலரது வாழ்வில் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு பெயர் சக்திமான். பிரபல மாயாஜால டிவி தொடரான சக்திமான், அந்தக் காலத்து சூப்பர் மேன் கதைகளில் மிக பிரபலம்.
இந்த தொடரில் சக்திமானாக நடித்தவர் முகேஷ் கன்னா. சமீபகாலமாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வரும் இவரின் சமீபத்திய பேச்சினாலும் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடித்த முகேஷ் கன்னா சக்திமான் தொடர் மூலம் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் சூப்பர் ஹீரோவாக திகழ்ந்தார். இப்போதும் சக்திமானுக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.மேலும் இந்த தொடரின் நாயகன் முகேஷ் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை கூறி சிக்கலில் மாட்டுவது வழக்கம்.
இந்நிலையில் தனது யூடிப் சேனலில் பேசிய முகேஷ், இளைஞர்களை சமூக வலைதளங்களில் பெண்கள் வசியப்படுத்தி வருகின்றனர் என்றும், ஆண்களை படுக்கைக்கு அழைத்தால் அவர்கள் பெண்களே இல்லை, செக்ஸ் ஒர்க்கர்கள் என்றும் வாய்க்கு வந்தபடி பேசி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் முகேஷ் கன்னா.
மேலும், இந்த வயதில் எனக்கே இளம் பெண்கள் இலவச செக்ஸ் ஆசை காட்டி வலை விரிக்கின்றனர். சமூகவலைத்தளத்தை இளைஞர்கள் தவறான வழியில் பயன்படுத்தி வருகின்றனர். இளம் பெண்கள் பசங்களை ஏமாற்றி காசு பறித்து வருகின்றனர் எனவும் அவர் பேசி உள்ளார்.
அவரின் இந்த பேச்சு பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இந்தியாவில் தினமும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து முகேஷ் வாய் திறந்தாரா என்றும் பெண்கள் தங்களின் ஆசையை வெளியில் சொல்லாமல், ஆண்களின் ஆசைக்கு தகுந்தபடி மட்டும் தான் நடக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சக்திமான் தொடரை படமாக்கும் முயற்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நம்மட பாவ்னி அமீருக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதா-வைரலாகும் வீடியோ..!
- அடடே.. இவர் தான் நடிகை அம்பிகாவின் மகனா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே ..!
- பிரபல நடிகரின் படத்திற்கு விளம்பரம் செய்த நாக சைதன்யா
- தல ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி..!
- ஷாருக் கான் மற்றும் பிரபல தமிழ் நடிகரை ஒரே இடத்தில் சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி !
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!