• Oct 16 2024

'சவுத் இந்தியன் அமீர்கான்' என என்னை சொல்லுறாங்க.. இன்னும் புஷ் பண்ணனும்..!வெற்றிவிழாவில் அலறிய RJ பாலாஜி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் தான் சிங்கப்பூர் சலூன். இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார். 

சிங்கப்பூர் சலூன் RJ பாலாஜியின் LKG மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களைத் தயாரித்த வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பேனரால் ஆதரிக்கப்படுகிறது. 

இப்படத்தில் பாலாஜி தவிர, சத்யராஜ், லால், ரோபோ சங்கர், மீனாட்சி சவுத்ரி, கிஷேன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்துடன் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வசூலில் முன்னிலையில் காணப்படுகிறது.


இதை முன்னிட்டு சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் வெற்றி விழா நடத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் ஆர் ஜே பாலாஜி கூறும் போது,

சிங்கப்பூர் சலூன் படம் வெற்றி அடைந்ததில் பெரும் மகிழ்ச்சி. இதன் இரண்டாம் பாதியில் அரவிந்த்சாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப்போல் ஒருவர் நம் வாழ்வில் வந்து விட மாட்டார்களா? என நிறைய பேர் சொன்னார்கள் என்றார். அப்படி சிறப்பாக நடிப்பை கொடுத்த அவருக்கு நன்றி. 

இந்த படம் வெளியான முதல் வாரத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இரண்டாவது வாரத்தில் படத்திற்கு புஷ் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சக்சஸ் மீட் நடத்துவதற்கான காரணம். சிங்கப்பூர் சலூன் எங்கள் படமும் பார்வையாளர்களுக்கு பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியானதே.


அதுமட்டுமின்றி 'சவுத் இந்தியன் அமீர்கான்' என என்னை சின்னி ஜேம்ஸ் சார் சொன்னது எனக்கு மிகவும் பயம் வந்து விட்டது. அவர் அவ்வளவு பெரிய லெஜெண்ட். அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது. அந்தப் பட்டமும் எனக்கு வேண்டாம்.

இந்த படத்திற்கு ஆரம்பமும் முடிவும் நல்லதா எழுதுங்க என்று  இமான் அண்ணாச்சி சொன்னார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. மீடியாக்கு அவங்க அவங்க கருத்தை சொல்ல எல்லா சுதந்திரம் உண்டு. அதேபோல மக்களுக்காக நாங்கள் எடுத்த படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது.

என்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் கொண்டு காட்டிய இயக்குனர் கோகுலுக்கு மிகப்பெரிய நன்றி. எல்.கே.ஜி 2,  மூக்குத்தி அம்மன்2  போன்ற படங்களை இயக்குவதற்கு ஐடியா உண்டு.

அதையும் ஐசரி சாரிடம் தான் செய்வேன்.. கத்தி, ரத்தம் போன்ற படங்களுக்கு மத்தியில் நிறைய பேருக்கு நம்பிக்கை தரும் விதமாக சிங்கப்பூர் சலூன் அமைந்துள்ளது. இது இன்னும் சிறப்பாக ஓட வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்றார்.

Advertisement