• Feb 23 2025

சிங்கப்பூர் சலூன் VS ப்ளூ ஸ்டார்; முட்டி மோதி வெளியான படங்களின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் தான் சிங்கப்பூர் சலூன். இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார். 

'ப்ளூ ஸ்டார்' திரைப்படமானது இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

முதல் நாள் முடிவில் சிங்கப்பூர் சலூன் உலகளவில் ரூ. 2 கோடி வசூலித்துள்ளதோடு, ப்ளு ஸ்டார் திரைப்படம் ரூ. 80 லட்சம் வசூலை பெற்றது.


2 நாள் முடிவில் சிங்கப்பூர் சலூன் ரூ. 2.8 கோடியும், ப்ளு ஸ்டார் ரூ. 1.9 கோடியும் வசூலித்துள்ளதாம்.

இந்த நிலையில், ஒரே நாளில் வெளியான குறித்த இரு படங்களின் இதுவரையிலான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் சிங்கப்பூர் சலூன் படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 8 கோடி வரையிலான வசூலையும், ப்ளூ ஸ்டார் படம் மொத்தமாக ரூ. 5 கோடியும் வசூலித்துள்ளதாம்.

எதிர் வரும் நாட்களிலும் இரண்டு படத்திற்கான வசூலும் கண்டிப்பாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement