• Jan 19 2025

நாட்டுல நீட் தேர்வு தேவையில்லை.. அதிரடியாக கூறிய தவெக தலைவர்!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது கட்டமாக இன்றைய தினம் மாணவர்களுக்கு கல்வி விருது விழா வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்று வருகின்றது. இந்த விழாவில் உரையாற்ற மாட்டேன் என கூறிய விஜய் தற்போது உரையாற்றியுள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விஜய் உதவிகளையும், ஊக்குவிப்பு  தொகைகளையும் கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகின்றார்.


கல்வி விருது விழாவின் முதல் சந்திப்பு கடந்த மாதம் 28-ம் திகதி  சென்னை திருவான்மையூரில் நடைபெற்றது. இதில் பல கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் காணப்பட்டன. ஆனாலும் மாணவர்கள் மகிழ்ச்சியாக விஜயின் கைகளால் பரிசுகளை வாங்கி வயிறார உண்டு சென்றிருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது சென்னை திருவான்மையூரில் நடைபெறும் இரண்டாம் கட்ட விருது விழா நிகழ்ச்சியில் பேசிய விஜய், எதுவும் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.ஆனால் நீட் தேர்வு பற்றி பேச வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டு தான் வந்தேன். நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என அதிரடியாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் கடும் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement