• Jan 19 2025

விஜய் சுத்த வேஸ்ட்.. லைட் பிடிக்க தான் லாயக்கு.. அரசியல் பிரபலத்தின் கடுமையான விமர்சனம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் சுத்த வேஸ்ட் என்றும் எஸ்ஏ சி மட்டும் இல்லை என்றால் அவர் விளக்கு புடிக்க மட்டுமே லாயக்கு என்றும் பிரபல அரசியல் தலைவர் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
விஜய் நடித்த ஆரம்பகால படங்கள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு அவர் நடிப்பில் ஈடுபாட்டுடன் இருந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார் என்பதும் இளைய தளபதி, தளபதி என படிப்படியாக உயர்ந்த அவர் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஆகியுள்ளார் என்பதும் தெரிந்தது.

தொடர்ச்சியாக தனது படங்களுக்கு அரசியல்வாதிகள் பிரச்சனை செய்வதால் தான் அவர் அதிரடியாக அரசியலில் இறங்கியதாகவும், அது மட்டும் இன்றி, மாறி மாறி இரண்டு கட்சிகளே தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாற்றம் வேண்டும் என்ற காரணத்துக்காகவும் அவர் அரசியலுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் குறித்து காரசாரமாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யை விட அஜித்துக்கு தான் அதிக ரசிகர்கள் என்றும் , சோசியல் மீடியாவிலும் அஜித்துக்கு பலம் அதிகம் என்றும், ஆனால் விஜய் தான் பெரிய ஆள் என்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்தையே தோற்கடிக்க முடியாத விஜயால் தமிழ்நாட்டில் அரசியலில் இறங்கி வெற்றி பெற முடியுமா என்று சமீபத்தில் நடந்த கல்வி உதவி வழங்கும் விழாவில் கூட அவர் நீட் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் எழுதி தரும் ஸ்கிரிப்ட்டை வைத்து மட்டும் தான் அவர் பேசுகிறார் என்றும் தெரிவித்தார்.

ரஜினிக்கு இருக்கும் மாஸ் விஜய்க்கு இல்லை என்றும் ரஜினி, சல்மான்கான் உள்ளிட்டோர் 70 வயதிலும் மிகப்பெரிய நடிகராக உள்ளார்கள் என்றும் ஆனால் விஜய் அந்த அளவுக்கு வர முடியாது என்றும் தெரிவித்தார்.

விஜய் படத்தை தியேட்டரில் பார்க்க சென்றால் 2000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் உள்ளது. அதை தடுக்க முடியாத விஜய், மக்களுக்கு என்ன நல்லது செய்யப் போகிறாரா? என்றும் அவர் கூறினார்.

மேலும் அவருடைய அப்பா எஸ்எஸ்சி மட்டும் இல்லையென்றால் விஜய் தற்போது ஒரு கேமராவை பிடித்துக் கொண்டு செல்லும் டெக்னீசனாகவோ அல்லது லைட் பாயாகவோ இருந்திருப்பார் என்றும் அல்லது வேறு தொழிலுக்கு சென்று இருப்பார் என்றும் அவர் சுத்த வேஸ்ட் என்றும் அவருக்கு எதுவுமே தெரியாது என்றும் தடா ரஹிம் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement