• Jan 26 2026

விஜய்க்காக தனது படத்தையே தியாகம் செய்த தனுஷ்.! வைரலாகும் பின்னணி தகவல்..

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் படங்களில் ஒன்றாக தளபதி விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், சினிமா வட்டாரத்திலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ஆனால், இந்த படத்தின் உருவாக்கத்திற்கு பின்னால் ஒரு முக்கியமான, அதே நேரத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


எச்.வினோத், தமிழ் சினிமாவில் தைரியமான கதைகள், அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மையமாக வைத்து படங்களை உருவாக்கும் இயக்குநராக அறியப்படுகிறார். இவரது இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாகும் என சில காலமாகவே பேசப்பட்டு வந்தது.

அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டிருந்ததாகவும், தயாரிப்பாளராக லலித் குமார் இணைந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த கூட்டணி விரைவில் படமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில், தளபதி விஜய் தனது கடைசி திரைப்படத்தை இயக்குநர் எச்.வினோத்துடன் இயக்கவுள்ளதாக திட்டமிட்டிருந்ததால் அவருக்காக தனுஷ் பெருந்தன்மையுடன் ஒரு முடிவெடுத்தார். அதாவது, லலித் குமாரிடம் பேசி வினோத் முதலில் விஜய்யின் படத்தை முடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் தனுஷ். இத்தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement