• Dec 12 2024

அஜித் பிரச்சனை இத்தோட முடிந்தது..! நன்றி கூறி யோகிபாபு போட்ட அந்த வீடியோ வைரல்..!

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் யோகி பாபு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஷேர் செய்து "நன்றி அஜித் சார்" என்று பதிவிட்டுள்ளார். அதுவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  


குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, த்ரிஷா கிருஷ்ணன், பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஐதராபாத்தில் நடந்த ஷூட்டிங் போது யோகி பாபு, அஜித் குமார் மற்றும்  நிர்வாக தயாரிப்பாளருடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.  இந்நிலையில் அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்த யோகிபாபு. அந்த வீடியோவில் அஜித் அருகில் இருந்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் நன்றி அஜித் சார் என்று பதிவிட்டுள்ளார். 


யோகி பாபுவிற்கும் அஜித்குமாருக்கும் பிரச்சினை என ஒரு வதந்தி வளம் வந்தது அதாவது யோகி பாபுவை பார்த்து அஜித் என்னை தொடக்கூடாது என்று கூறியதாக இணையத்தில் ஒரு செய்தி ஆக்கிரமித்து இருந்தது.  தற்போதும் அந்த பிரச்சினை இருக்கிறது என்று எதிர்பார்த்த நெட்டிசன்களுக்கு யோகிபாபு போட்ட பதிவு அதிர்ச்சி அளித்துள்ளது.  


என்னை தொட வேண்டாம் என்று சொல்ல அஜித்தே யோகிபாபு மீது கைபோட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனை அடுத்து யோகி பாபு ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார், மேலும் வெற்றிகரமான இந்த ஜோடி மற்றொரு வெற்றிகரமான படத்தை வழங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.


Advertisement

Advertisement