• Jan 18 2025

கையில் கற்பூரத்தை ஏற்றிவைத்துக்கொண்டு கேப்டன் ரசிகன் செய்த செயல்... வைரலாகும் வீடியோ...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் தினம். கேப்டனின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரின் தீவிர ரசிகன் செய்த காரியம் தற்போது வைரலாகி வருகிறது.  


கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த 1980ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தார். திரையுலகில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களுக்கு மத்தியில் மிகப் பெரிய நடிகராக வலம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் திரை உலகை அடுத்து அவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்தார். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரண்டு ஆளுமையான தலைவர்கள் தமிழகத்தில் இருக்கும் போதே புதிய கட்சியை ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே சுமார் 8 சதவீத ஓட்டுகள் பெற்றார் என்பதும், அவர் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற்றார்.


இப்படி நல்லாச்சி செய்ததோடுமட்டுமல்லாமல் நிறைய மக்களுக்கும் திரையுலக பிரபலங்களுக்கும் பலவாறு உதவி செய்துள்ளார். இறக்கும் வரை நேர்மையாக இருந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின்  பிறந்தநாள் நினைத்தை முன்னிட்டு அவரின் ரசிகர் ஒருவர் கையில் கர்ப்பூரம் பற்ற வைத்து அதே கையில் ஒரு பேனை மூலம் சுவற்றில் அவரது ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

Advertisement

Advertisement