பிரபல நடிகர் அஜித் தமிழ் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தனது அணியுடன் இணைந்து துபாயில் நடைபெற்ற 24 மணி நேரம் கார் ரேஸில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்றார். இந்நிலையில் அஜித்தை காண வந்த ரசிகர்கள் அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக வீடியோ ஒன்று வரைலாகி வருகிறது.
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவராத நிலையில் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். அடுத்ததாக கார் ரேசில் இந்தியாவுக்காக பங்கு பற்றி அந்த வெற்றியை ரசிகர்களுக்கு பரிசாக அளித்தார். ஒரு பக்கம் ரசிகர்கள் இதனை கொண்டாடிக்கொண்டிருக்க தற்போது கார் ரேஸிங் நடந்த இடத்தில் தல அஜித்திடம் ரசிகர்கள் அத்துமீறியதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் பலவாறு கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ரேஸ் நடந்த இடத்தில் அஜித்தை காண ரசிகர்கள் பல்லாயிரம் பேர் திரண்டனர். ரசிகர்களின் ஆதரவை பார்த்து அவர்களை அகண்டிஷலாக லவ் பண்ணுவதாக அஜித் பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் அஜித்திற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் ஆரவ் அவருக்கு பாதுகாப்பாக வந்தனர். அந்த கூட்ட நெரிசலில் ரசிகர் ஒருவர் அஜித்தின் தலையில் கைவைத்து அத்துமீறி நடந்துகொண்டுள்ளார்.
இந்த செயலால் கடுப்பான அஜித், அவரின் கையை தட்டிவிடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் "இதுக்கெலாம் சேர்த்துதான் பேட்டியில் தரமான செருப்படி கொடுத்துள்ளார் ரசிகர்களுக்கு" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். சமீபத்தில் அஜித் அளித்த பேட்டியில் "நடிகர்களை கொண்டாடிக்கொண்டிருக்கமால் உங்களது வேலையை பாருங்கள், உங்களுக்காக வாழுங்கள்" என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!