பிக்பாஸ் இன்றுடன் 101 நாட்களை கடந்துள்ளது. இந்த வாரம் இடம்பெற்ற டபுள் எவிக்சனால் பார்வையாளர்கள் மிகவும் அப் செட்டுக்கு உள்ளாகியுள்ளார்கள். அதற்கு காரணம் இதுவரை சிறப்பாக விளையாடி வந்த தீபக் திடீரென வெளியேற்றப்பட்டது தான்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள பவித்ரா, விஜே விஷால் ஆகியோர் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் இருப்பதாகவும், இவர்களை விட நன்றாக விளையாடிய தீபக் வெளியேறியது தான் திட்டமிட்ட சதி எனவும் கொந்தளித்து வருகின்றார்கள்.
d_i_a
இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் எட்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக 15 வாரங்கள் நாமினேட் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்ட ஒரே ஒரு போட்டியாளராக ஜாக்குலின் காணப்படுகின்றார். இதனால் பிக் பாஸ் வரலாற்றிலேயே ரியல் பிக்பாஸ் வின்னர் ஜாக்குலின் தான் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜாக்குலின் பண பெட்டியுடன் எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.
அதாவது பிக்பாஸ் புதிதாக வைத்த டாஸ்க்கில் பணபெட்டியை எடுக்க முடியாதவர்கள் வெளியேற வேண்டும் என்ற ரூல்ஸை போட்டு உள்ளார். இதனால் ஜாக்குலின் பணபெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுக்க முடியாமல் வெளியேறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
எனினும் ஜாக்குலினின் ரசிகர்களை மனம் தளராமல் அவருக்கு வாக்களித்து வருமாறு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் ஜாக்குலின் எவிக்சன் தொடர்பில் அதிகார்வ பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!