• Nov 21 2025

கடைசி நம்பிக்கை நீதான் கடவுளே! கங்குவாவை காப்பாத்து! குழுவோடு கோவில் தரிசனம்- சூர்யா!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா உட்பட முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் கங்குவா. இது இயக்குனர் சிறுத்தை சிவா மூலம் இயக்கப்பட்டு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்தார். பல மொழிகளில் பல திரையரங்குகளில் வெளியான கங்குவா ரசிகர்களிடத்தில் கலவையான விமர்சனம் பெற்று  வருகிறது. 


சூர்யா ரசிகர்கள் இந்த படத்தினை கொண்டாடினாலும் சினிமா நெட்டிசன்கள் இதனை வைத்து செய்கிறார்கள்.  இதனாலே ஆரம்பத்தில் வசூலில் பட்டையை கிளப்பிய கங்குவா தற்போது கொஞ்சம் வசூலில் சரிவை சந்தித்துள்ளது. நிச்சியம் 200 கோடி வசூல் பெரும் என எதிர்பார்த்த நிலையில் படம் ரிலீசாகி 1 வாரத்தில் இப்படி நடந்துள்ளது கங்குவா குழுவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் இறுதியில் கடவுளே கதியென சூர்யாவும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் இன்று வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  


Advertisement

Advertisement