தென்னிந்தியாவின் சிறந்த நடிகையாகவும் நடனக்கலைஞருமாக விளங்குபவரே சாய்பல்லவி. இவர் தெலுங்கு , தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டவர். சாய்பல்லவி மலையாள பிரேமம் என்ற படத்தில் மலர் கரெக்ட்டருடன் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து மாரி 2 ,அமரன் மற்றும் கார்கி போன்ற பல படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த அமரன் படம் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துக்கொண்டதுடன் அதிகளவான வசூலையும் பெற்றுக் கொடுத்து.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவியை கேட்க இயக்குநர் ஆசைப்பட்டிருக்கிறார். அவருடைய முதல் படமான ‘பிரேமம்’ வெற்றிக்கு பிறகு, இந்த திரைப்படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்டதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஆனால், அந்த நேரத்தில் சினிமா கோ-ஆர்டினேட்டர் ஒருவரிடம் இது குறித்து பேசியபோது, படக்குழு அவரை தேர்வு செய்யாத முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. படத்தின் கதாபாத்திரத்திற்கு மாடர்ன் லுக் தேவையானதால், சில உடைத் தேர்வுகளை நடிகை ஏற்க வேண்டியது அவசியமாக இருந்ததாம். ஆனால், சாய் பல்லவி “சிலவ்லெஸ்” உடையில் நடிக்க மறுத்ததால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், படக்குழு மற்றொரு நடிகையை தேர்வு செய்து, படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. அதே நேரத்தில், சாய் பல்லவியும் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் அடிப்படை உத்திகளை விட்டுக் கொடுக்காமல் பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
Listen News!