• Jan 18 2025

இயக்குநர் வீட்டில் நடந்த சோகம்! காலமான முக்கிய பிரபலம்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் லிங்குசாமியின் மூத்த சகோதரர் கேசவன் இன்று காலமானார். இவரின் இறுதி கிரியைகள் தற்போது நடைபெற்று வருகிறது. 'ஆனந்தம்', `ரன்', 'பையா', 'தி வாரியர்' உள்பட பல படங்களின் இயக்குநர் லிங்குசாமி ஆவார். வழக்கு எண் 18/9, கமலின் 'உத்தம வில்லன்' உள்பட சில படங்களை தயாரித்து உள்ளார். லிங்குசாமிக்கு ராதாகிருஷ்ணன், கேசவன் என இரண்டு அண்ணன்களும், சுபாஷ் சந்திரபோஸ் என்ற தம்பியும் உண்டு. 


இதில் இரண்டாவது அண்ணன் கேசவன் இன்று காலை மாரடைப்பினால் இறந்துள்ளார். கும்பகோணம் அருகே உள்ள குடவாசலில் திருப்பதி மளிகை கடை வைத்திருந்தார். சமீபகாலமாக சென்னையில் அண்ணனுடன் இருந்து வந்தவர் 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனத்தையும் சகோதரர்களுடன் சேர்ந்து கவனித்து வந்தார். 


இன்று காலை சென்னையில் காலமானார். அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை குடந்தை மாதுளம்பேட்டை உள்ள அவரது சகோதரர் இல்லத்தில் இருந்து புறப்படுகிறது.

Advertisement

Advertisement