தமிழ் திரையுலகில் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வரும் நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.C ஆகியோரின் வாழ்க்கையில் இடம்பெற்ற மறக்க முடியாத நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றது.
நடிகையாக மட்டுமன்றி அரசியலிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ள குஷ்பு, தனது முதல் கர்ப்பத்தின் போது கணவர் சுந்தர்.C தன்னிடம் வெளிப்படுத்திய அன்பையும் அக்கறையையும் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், “நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற சந்தேகம் ஏற்பட்டதும், பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த சுந்தர்.C-க்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தேன். அதற்கு அவர், முதலில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து உறுதிப்படுத்திவிட்டு எனக்குத் தொலைபேசி செய்யுமாறு கூறினார்.
அந்தக் காலகட்டத்தில் கையடக்கத் தொலைபேசிகள் புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்திருந்ததால், பல இடங்களில் சிக்னல் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இதனால் எனது அழைப்புக்காகக் காத்திருந்த சுந்தர்.C, சிக்னல் கிடைக்கும் இடத்தைத் தேடி காரில் பல இடங்களுக்குச் சென்றுள்ளார்.
இறுதியில் சிக்னல் கிடைத்ததும், பத்து நிமிடங்களுக்கும் மேலாக நடுரோட்டிலேயே காரில் காத்திருந்திருக்கிறார். நான் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தி அவரிடம் கூறியபோது, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
குஷ்பு பகிர்ந்துள்ள இந்த அனுபவம், கணவன் மனைவிக்கு இடையிலான அன்பையும் குடும்ப உறவுகளின் அழகையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!