தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் உற்சாகமாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டைக் காண ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர். மேலும், படத்தில் நடித்த நடிகர்கள், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் திரையரங்குகளுக்கு வருகை தந்து ரசிகர்களுடன் இணைந்து படத்தைப் பார்க்கும் நிகழ்வுகளும் கவனம் பெற்றுள்ளன.
படம் வெளியாவதற்கு முன்பே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. குறிப்பாக, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் ரூ.58.92 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான வரவேற்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மேலும், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் புதியதாக இணைந்துள்ளனர். ஹிருத்திக் ரோஷன் கேமியோவில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!