தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தனது நடிப்பால் மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஆன்மிக ஈடுபாடு தொடர்பான தகவல்களாலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றார்.
பொதுவாகத் திரைப்படங்கள், போட்டோஷூட்கள் மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் தமன்னா, சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கோயில்களுக்குச் சென்று வழிபடுவதிலும், தெய்வீக நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், துர்க்கை அம்மன் மீது கொண்டுள்ள பக்தியின் காரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் விரதம் இருப்பதாகவும், சில நேரங்களில் காலை உணவைத் தவிர்த்து வழிபாடுகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமன்னாவின் இந்த ஆன்மிகப் பழக்கம் குறித்த தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.
இதற்கிடையில், தமன்னா திடீரென ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதற்குப் பின்னால் ஏதேனும் விசேட காரணம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை அல்லது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஏதேனும் முக்கியமான அறிவிப்பை வெளியிட அவர் தயாராகி வருகிறாரா என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
Listen News!