பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த், ரசிகர்களிடம் எப்போதும் தனது எளிமை மற்றும் பணிவால் தனி இடத்தைப் பெற்றவர். இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.
‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கொச்சி சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே வெளியான ‘ஜெயிலர்’ படம் ரசிகர்களிடமும் வசூலிலும் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தை வரும் ஜூன் மாதம் திரையிட திட்டமிட்டு படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும், பொங்கல் பண்டிகை விடுமுறையை சென்னையில் குடும்பத்துடன் கழித்த ரஜினிகாந்த், அந்த நாட்களில் ரசிகர்களை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, விடுமுறை முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், சென்னைக்கு விமானத்தில் வந்த நடிகர் ரஜினிகாந்த், சக பயணிகளுக்கு உற்சாகமாக கையசைத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வழக்கம்போல எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண பயணியாக அவர் விமானத்தில் பயணித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Listen News!