• Feb 12 2026

இந்த மூவ்மெண்ட் நல்லா இருக்கே.!! வலைப்பேச்சு டீமுக்கு வணக்கம் சொன்ன நயன் குட்டீஸ்..

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, சமீப காலமாக மீண்டும் சினிமா பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர், தனக்கென தனி ரசிகர் வட்டத்தை நிலைநாட்டி  உள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா நடித்து வரும் புதிய படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பெண்களை மையமாகக் கொண்ட கதைகளிலும், வலுவான கதாபாத்திரங்களிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி ,வருகிறார்.

அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் நயன்தாரா தொடர்பான அப்டேட்கள் அடிக்கடி பேசுபொருளாகி வருகின்றன. அவர் வெளியிடும் பதிவுகள், அவரது ஸ்டைல், அவர் அணியும் ஆடைகள்  மற்றும் எளிமை ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

சமீபத்தில் நயன்தாராவும்  அவருடைய குடும்பமும்  துபாயில் ஒரு பிரம்மாண்டமான வீட்டை வாங்கி இருக்கின்றார்கள். அந்த வீட்டில் பொங்கல் கொண்டாடிய வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர்.  

அதன் பின்பு  அஜித்தின் அழைப்பை ஏற்று  அவர்கள் இருவரும் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்று அங்கும் தங்களுடைய பங்களிப்பை வெளிக்காட்டி இருந்தனர். 


இந்த நிலையில்,  நயன்தாரா மற்றும் விக்கியுடன் இணைந்து வலைப்பேச்சு டீம் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

ஏற்கனவே  பல நடிகர்கள், நடிகைகள் பற்றி பலவித விமர்சனங்களை முன்வைக்கும் இவர்கள், நயன்தாரா பற்றியும்  நெகட்டிவ் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். அதேபோல  வலைப்பேச்சு டீமில் உள்ளவர்களை குரங்குகள் எனவும்  நயன்தாரா விமர்சித்து இருந்தார். 

இவ்வாறான நிலையில் அவர்கள்  நயன்தாராவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளதோடு அவருடைய குழந்தைகளுடன்  கொஞ்சி விளையாடிய வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மேலும்  நயன்தாராவின் குழந்தைகள் அவர்களுக்கு தமிழில் வணக்கம் சொல்லியதோடு, அதற்கு அவர்கள் வீட்டில் தமிழ் தான் பேசுவாங்க என நயன்தாரா சொன்னதும்  மேலும் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement