• Jan 30 2026

முத்துவேல் வீட்டிற்குச் செல்லும் கோமதி... அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.! டுடே எபிசொட்

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயில் பாண்டியனோட கடைக்குப் போய் சரவணனைக் கூப்பிடுறார். அதைக் கேட்ட சரவணன் இங்க எதுக்கு வந்தனீ என்று கேட்க்கிறார். அதுக்கு மயில் உங்களைப் பார்க்கணும் என்று தான் வந்தேன் என்கிறார். பின் சரவணன் மயிலைப் பார்த்து இந்த இடத்தை விட்டு முதலில போ என்கிறார். அதைக் கேட்ட மயில் நான் சொல்லுறதை கொஞ்சம் கேட்கச் சொல்லி அழுகிறார்.


அந்த நேரம் பார்த்து பாண்டியன் அங்க வந்து ஏன்டா இப்புடி எல்லாம் பேசுற என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து சரவணன் மயில் கிட்ட நீங்க எப்புடி எல்லாம் எங்க குடும்பத்தை ஏமாத்தினீங்க என்று நான் நிரூபிச்சு டிவோர்ஸ் கொடுப்பேன் என்கிறார். அதைக் கேட்ட உடனே மயில் மாமா டிவோர்ஸ் எல்லாம் வேணாம் என்கிறார். அதுக்கு சரவணன் உனக்கு டிவோர்ஸ் கொடுக்காமல் என்னால சந்தோசமா வாழ முடியாது என்கிறார்.

அதனை அடுத்து பாண்டியன் சரவணனைப் பேசாமல் இரு என்கிறார். மேலும் மயிலை இங்க இருந்து கிளம்பு என்கிறார். மறுபக்கம் ராஜி கோமதியை கூட்டிக் கொண்டு முத்துவேல் வீட்ட போறார். பின் கோமதியைப் பார்த்த உடனே எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். அதனை அடுத்து பழனி நீ எப்புடி அக்கா இங்க எல்லாம் என்று சொல்லி சந்தோசப்படுறார். 


அங்க போன கோமதி நீங்க எல்லாரும் ஒரு தடவை எங்க வீட்டுக்கு சாப்பிட வரணும் என்கிறார். அதைக் கேட்ட முத்துவேல் எதுவுமே கதைக்காமல் இருக்கிறார். பின் சக்திவேல் கோமதியைப் பார்த்து உன்மேல எங்களுக்கு கோபம் இருக்கு என்கிறார். மேலும், இந்த வீட்டுக்கு நீ வராத என்கிறார் சக்திவேல். அதைக் கேட்ட கோமதி அழுகிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement