• Jun 28 2026

பாக்யராஜின் இறுதி ஊர்தியில் ஏன் எம்.ஜி.ஆர் படம்? ரசிகர்களை நெகிழ வைத்த பின்னணி.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர், நடிகர், கதையாசிரியர் எனப் பன்முகத் திறமையால் தமிழ் திரையுலகில் தனித்த அடையாளம் பதித்த பாக்யராஜின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல தசாப்தங்களாக சினிமாவில் அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளங்களிலும் இரங்கல் செய்திகள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட இறுதி ஊர்தி தயாராக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த அலங்கார ஊர்தியில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆருடன் பாக்யராஜ் இணைந்து இருக்கும் அரிய புகைப்படம் இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாக்யராஜின் கலைப்பயணத்தில் எம்.ஜி.ஆரின் ஊக்கமும் ஆதரவும் இருந்ததை நினைவூட்டும் வகையில் இந்தப் புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இறுதி ஊர்வலத்தில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய பாக்யராஜுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படுவது அவரது கலைச் சாதனைகளுக்கு வழங்கப்படும் உயரிய கெளரவமாகப் பார்க்கப்படுகிறது. அவரது நினைவுகள் என்றும் ரசிகர்களின் மனங்களில் நிலைத்திருக்கும்.

Advertisement

Advertisement