• Jun 28 2026

குருவின் பிரிவை தாங்க முடியவில்லையா? நெப்போலியனின் அந்த ஒரு வார்த்தை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் திரைக்கதை சக்ரவர்த்தி என்று ரசிகர்களால் போற்றப்பட்ட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் மறைவு, திரையுலகை மட்டுமல்ல ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு நேற்று காலை முதல் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாக்யராஜின் இறுதி ஊர்வலம் இன்று காலை 9.00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்படவுள்ளது. பின்னர், மதியம் 1.30 மணியளவில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பாக்யராஜின் மறைவு குறித்து நடிகர் நெப்போலியன் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், இயக்குநர் பாரதிராஜா மறைந்தபோது அது அவரது சீடர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. குருநாதரின் மறைவை பாக்யராஜால் மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். அந்த வேதனையே அவரை அதிகம் பாதித்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது என்று கூறினார்.


மேலும், இந்திய சினிமாவில் திரைக்கதை அமைப்பில் பாக்யராஜுக்கு நிகர் பாக்யராஜ் மட்டுமே. சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை அற்புதமான திரைக்கதையாக மாற்றிய அவரது திறமை தனித்துவமானது. தமிழ் சினிமாவை உலக அரங்கில் பேச வைத்த படைப்பாளிகளில் ஒருவராக அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு திரைத்துறையால் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் நெப்போலியன் புகழாரம் சூட்டினார்.

பாரதிராஜாவின் உதவி இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும், கதாசிரியராகவும் தனது பயணத்தைத் தொடங்கிய பாக்யராஜ், பின்னர் கதாநாயகனாகவும் இயக்குநராகவும் உயர்ந்து, தொடர்ச்சியான வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் சினிமாவில் தனக்கென அழியாத முத்திரையைப் பதித்தார்.

அவரது இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement