• Jun 28 2026

இது தேவையான பதிவா? பாக்யராஜ் மறைந்த நாளிலேயே குஷ்பு பகிர்ந்த புகைப்படம்.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை குஷ்பு வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு இணையத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 25 ஆம் தேதி கோவாவில் நடைபெற்ற குஷ்பு - சுந்தர். சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமண விழாவில் பாக்யராஜ் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார். அந்த நிகழ்வில் அவர் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து மேடையேறி வாழ்த்து தெரிவித்த காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு சென்னை திரும்பிய பாக்யராஜ், நேற்று காலை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


அவரது மறைவையடுத்து நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அமைதியில் இளைப்பாறுங்கள். உங்களுடன் கழித்த தருணங்கள் என்றும் என் நினைவில் இருக்கும். மிஸ் யூ" என்று உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டார்.

எனினும், அதற்கு சில மணி நேரங்களுக்குப் பின்னர், தனது மகளின் திருமண விழாவில் கணவர் சுந்தர். சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை குஷ்பு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, பாக்யராஜின் மறைவால் திரையுலகம் துக்கத்தில் இருக்கும் நேரத்தில் இத்தகைய பதிவு வெளியிடப்பட்டிருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் கலவையான கருத்துகள் பதிவாகி வருகின்றன. 


சிலர், இது நேரம் பொருத்தமற்ற பதிவு என விமர்சித்து வருவதுடன், மற்றொரு தரப்பினர், குடும்ப நிகழ்வின் புகைப்படங்களை பகிர்வது அவரது தனிப்பட்ட முடிவு என்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

எனினும் அதற்கு பதிலடி கொடுத்த குஷ்பு, அப்படியென்றால் ஏன் என்னைப் பின்தொடர்கிறீர்கள்?? விமர்சிப்பதற்காக மட்டுமா?? என் மகளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.

பூர்ணிமாவை யாருக்கு நன்றாகத் தெரியும்? உங்களுக்குச் சிரமமாக இருந்தால், என்னைப் பின்தொடர்வதை நிறுத்துங்கள். மகிழ்ச்சியாக இருக்க எனக்கு எல்லா உரிமையும் உண்டு எனப் பதிவிட்டுள்ளார்

இவ்வாறு, குஷ்புவின் சமூக வலைத்தள பதிவு தற்போது இணையத்தில் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement