சமீப காலமாகவே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்கள் அடுத்தடுத்து திருமண பந்தத்தில் இணைந்து வருகின்றார்கள். அதில் நடிகை ரம்யா பாண்டியன் ஒருவராக காணப்படுகின்றார். இவர் ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானார்.
அதன் பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. தொடர்ந்து குக் வித் கோமாளிலும் கலந்து கொண்டார். இவர் நடித்த படங்களில் ஒரு சில படங்கள்தான் இவருக்கு கை கொடுத்தது. ஆனாலும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக காணப்படுவார்.
மேலும் இவர் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருடைய தம்பியின் திருமணமும் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது அவர் தனது கணவரோடு எடுத்த புகைப்படமும் திருமணத்தின் போது கீர்த்தி பாண்டியனுடன் போட்ட குத்தாட்டமும் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாக இருந்தது.
மேலும் ரம்யா பாண்டியனின் திருமணம் கங்கை நதியோரத்தில் எளிமையாக நடைபெற்றது. அதன் பின் இவர்களுடைய ரிஷப்சன் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து அவருடைய தம்பி பாண்டியனின் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், ரம்யா பாண்டியன் வீட்டில் தொடர்ச்சியாக விசேஷ நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் தனக்கு தாலி பிரித்து போட்டாச்சு என பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கும் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!