தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம்' என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் மணிகண்டன். இவர் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் குடும்பஸ்தன். இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
லவ்வர், குட் நைட், ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான மணிகண்டன் நடிப்பில் 'குடும்பஸ்தன் திரைப்படத்தின் 'ஜீரோ பேலன்ஸ் ஹீரோ' என்ற முதல் பாடலின் லிரிக்ஸ் வீடியோ ரிலீசாகி உள்ளது. இந்த பாடலை நடிகர் துல்கர் சல்மான் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தினை நக்கலைட் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்கு 'குடும்பஸ்தன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அது வைரலாகி வந்தது. இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா. குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் ஷான் ரோல்டன் பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!