• Feb 20 2026

'ஹேப்பி ராஜ்' படத்தில் இருந்து ஆடினே இருப்பேன் பாடல் வெளியானது! டிரெண்டிங் என்னனு பாருங்க

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'ஹேப்பி ராஜ்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘லவ் டுடே’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இந்த திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ்க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் நடிகர் அப்பாஸ் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  


இந்த நிலையில், “ஹேப்பி ராஜ்” படத்தின் முதல் பாடலான “ஆடினே இருப்பேன்”  வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியானவுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பாடலில் நடிகர் அஜித் குமார் ரேசிங், பென்குயின் உள்ளிட்ட சமீப கால டிரெண்டிங் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் துள்ளலான மற்றும் உற்சாகமான பாடலாக அமைந்துள்ள ஆடினே இருப்பேன் பாடல் , தற்போது  இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.  

Advertisement

Advertisement