• Feb 20 2026

16 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘அழகிய லைலா’.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘அழகிய லைலா’ என்ற பாடலின் மூலம் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரம்பா. அந்த பாடலில் அவரது உடையும், ஆடலும் யாராலும் மறக்க முடியாததாக அமைந்தது. இதிலேயே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

இதனைத் தொடர்ந்து, தொடை அழகி என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட ரம்பா, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். பின்னர், 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது ரம்பா கனடாவில் குடும்பத்துடன் செட்டிலாகி உள்ளார்.

இந்த நிலையில், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வர உள்ளதாக ரம்பா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி வெளியாகி பலருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து ஸ்லிம் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும், வெள்ளித் திரையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுப்பதற்காக புதிய கதைகளை கேட்டு, அதில் ஒரு கதையை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘பெண் சிங்கம்’ என்ற படத்தில் 2010 ஆம் ஆண்டு ரம்பா கடைசியாக நடித்திருந்தார். தற்போது அவருக்கு 49 வயது ஆகிறது.

ரம்பா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளதாக வந்துள்ள இந்த தகவல், ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement