பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனா மயிலைப் பார்த்து செந்தில் உங்ககிட்ட பேசினதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க என்கிறார். அதுக்கு மயில் பெத்த அம்மாவே கதைக்கும் போது செந்தில் தம்பி கதைக்க மாட்டாங்களா? என்கிறார். மேலும் என்னால உனக்குத் தான் கஷ்டம் என்கிறார் மயில். அதனை அடுத்து மயில் வீட்டுக்கு வந்து நிற்கிறதைப் பார்த்த பாக்கியம் நீ வரமாட்ட என்று நினைச்சேன் என்கிறார்.
பின் மயில் பாக்கியத்தைப் பார்த்து எதுக்காக இப்புடி எல்லாம் பேசுறீங்க என்று கோபப்படுறார். அதைக் கேட்ட பாக்கியம் இவளுக்கு இந்த வீட்டில இடம் கிடையாது என்கிறார். அதைத் தொடர்ந்து மீனா இவங்க இந்த வீட்டில தான் இருப்பாங்க என்று பாக்கியம் கிட்ட சொல்லுறார். மேலும், மனசு சரியில்ல என்றால் உடனே எனக்கு கால் எடுத்துக் கதையுங்க என்று மயிலைப் பார்த்து சொல்லுறார் மீனா.

பின், மயில் மீனா கிட்ட வேலை ஏதும் வாங்கித் தரச்சொல்லுறார். அதுக்கு மீனாவும் சம்மதிக்கிறார். மறுபக்கம் கதிர் ராஜியை கிளாஸுக்கு கூட்டிக் கொண்டு போறார். அதைத் தொடர்ந்து வடிவு விருந்து என்ற ஒன்று நடக்காமல் இருந்திருந்தால் ராஜி தன்னும் இந்த வீட்டுக்கு வந்திட்டுப் போயிருப்பாள் என்கிறார். அதைக் கேட்ட மாரி நீங்க வேணும் என்றால் பாருங்க அவள் ஏதாவது ஒரு காரணத்தை வைச்சு வீட்டுக்கு வந்திடுவாள் என்கிறார்.
பின் முத்துவேல் சக்திவேலைப் பார்த்து குமாருக்கு நல்ல பெண்ணைப் பார்த்திருக்கேன் என்கிறார். அதைக் கேட்ட சக்திவேல் சந்தோசப்படுறார். மேலும், நாளைக்கு பொண்ணு வீட்டில இருந்து நம்ம வீட்டுக்கு வாறாங்க என்கிறார். ஆனா, குமார் அந்தக் கல்யாணத்தில விருப்பம் இல்லாமல் இருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!