• Jan 19 2025

சன்டிவி சீரியல் நடிகைகளுக்கு என்னாச்சு? ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அழுத சோகம்! வைரல் வீடியோ

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலுக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் காணப்பட்டார்கள்.அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் நடிக்கும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தான். 

எதிர்நீச்சல் சீரியலின் ஆரம்பத்தில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து வந்தார். ஆனாலும் அவர் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்குப் பின்பு அவரது கேரக்டரில் வேலராமமூர்த்தி நடித்தார்.

ஆனாலும் மாரிமுத்துவின் இடத்தை பிடிப்பதற்காக பெரிதும் பாடுபட்டார். இடையில் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்களிலும் சரிவை சந்தித்து சென்றது.


இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் இடம் பெற்ற கதைக் களங்கள் ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்தது. அதிலும் தர்ஷினி கடத்தல் விவகாரத்தில் பெண்கள் துணிந்து பல காரியங்களை செய்தாலும் அவர்களுக்கு இறுதியில் தோல்வியே கிடைக்க நேரிட்டது. இதனால் இந்த சீரியலையே ரசிகர்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள்.

ஆனாலும் தற்போது பெண்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆக  குணசேகரன் இதுவரை செய்த பாவங்களுக்கு எல்லாம் சேர்த்து வைத்து அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கின்றது. இவ்வாறு இந்த சீரியல் தற்போது நிறைவுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகைகள் இறுதியாக இடம்பெற்ற ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அழுது உள்ளார்கள். தற்போது குறித்த காணொளி வெளியாகி பார்ப்பவர்களை வேதனை அடைய வைத்துள்ளது.


Advertisement

Advertisement