தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான பார்வையைக் கொண்ட இயக்குநராகவும் அதேசமயம் ஒரு திறமையான நடிகராகவும் தன்னை நிரூபித்தவர் தான் செல்வராகவன். அவரது ஸ்கிரிப்ட் தேர்வுகள், பாத்திர தேர்வுகள் எல்லாம் அவரை எப்போதும் பிற நடிகர்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன.
இந்நிலையில், செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் "மனிதன் தெய்வமாகலாம்" எனும் பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை புதிய இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் (First Look Poster) இன்று வெளியிடப்பட்டுள்ளது, இது ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் படக்குழுவால் வெளியிடப்பட்ட First Look Poster, ஒரு வலிமையான சிந்தனையைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் செல்வராகவன் ஒரு வித்தியாசமான முகபாவனை கொண்ட பார்வையுடன் காட்சியளிக்கிறார்.
Listen News!