• Sep 28 2025

Swimming Pool- இல் கணவருடன் Fun பண்ணும் ரம்யா பாண்டியன்.! இன்ஸ்டாவில் வைரலான போட்டோஸ்.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் ரம்யா பாண்டியன். இவருடைய  தோற்றம், மாறுபட்ட நடிப்பு மற்றும் பாசிட்டிவ் பர்சனாலிட்டி காரணமாக, ரசிகர்கள் மத்தியில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளார். திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் தொடர்ந்து பிஸியாக இருந்த இவர், சமீபத்தில் தனது திருமண வாழ்க்கையை துவங்கி அனைவரையும் ஆச்சிச்சரியப்பட வைத்தார். 


இந்நிலையில், ரம்யா பாண்டியன் தனது கணவருடன் ஒன்றாக ஸ்விம்மிங் பூலில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலக பிரபலங்களும் இதை கமெண்ட் செய்து வருவதால், இந்தப் பதிவுகள் செம்ம ஹைலைட்டாக மாறியுள்ளன.

ரம்யா பாண்டியன், தமிழ் சினிமாவில் தனது பயணத்தை 2016ஆம் ஆண்டு வெளியான "ஜோக்கர்" திரைப்படம் மூலம் துவங்கினார். சமூககட்டுப்பாடு அடங்கிய இந்த படத்தில் அவரது செயல்பாடு பாராட்டபட்டது. அதன் பின் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.


திரைப்படங்களோடு மட்டுமல்லாமல், விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிக்பாஸ்" மற்றும் அதனைத் தொடர்ந்து "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியிலும் பங்கேற்றதன் மூலம், அவர் ஒரு பிரபலமான நடிகையாக மாறினார்.

Advertisement

Advertisement