• Sep 07 2025

மாடர்ன் லுக்கில் ரசிகர்களைக் கவர்ந்த ஜனனி... இன்ஸ்டாவை அலறவைத்த கிளிக்ஸ் இதோ.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட உலகில், தனது இனிமையான தன்மையாலும், நேர்மையான பார்சனாலிட்டியாலும், ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கியவர் ஜனனி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குறிப்பாக தனது இலங்கைத் தமிழ் பேச்சால், பலரது கவனத்தையும் கவர்ந்திருந்தார். 


இப்போது, ஜனனி தனது புதிய ஸ்டைலிஷ் போட்டோஷூட்டால் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் காட்டியுள்ளார். இவரது இந்த புதிய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, பல புதிய முகங்களை மக்கள் மனதில் அறிமுகப்படுத்தியது. ஆனால், ஜனனி, அவரது தன்னம்பிக்கை பேச்சு மற்றும் பாரம்பரியத்துடன் கூடிய நடத்தை ஆகியவைகள் மூலம் ஒரு நியாயமான போட்டியாளராக விளங்கினார்.


அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகும், சமூக வலைதளங்களில் அவருக்கான பின்தொடர்வோர் எண்ணிக்கை உயர்ந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பிறகு, ஜனனிக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அதில் முக்கியமானதாக, தளபதி விஜய் நடித்த “லியோ” படத்தில் ஒரு சிறிய, ஆனால் முக்கியமான supporting ரோலில் நடித்திருந்தார்.


இதைத் தொடர்ந்து, “உசுரே” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்து, தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்தார். இப்படத்தில் அவரது மென்மையான காட்சிகளும், உணர்ச்சிபூர்வமான நடிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அந்தவகையில் ஜனனியின் சமீபத்திய போட்டோஷூட், அவரது புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தை வெளிக்கொணர்கிறது. பாரம்பரியம் மற்றும் அழகு என்ற இரண்டையும் சமநிலைப்படுத்தி வரும் அவர், இப்போது ஒரு மாடர்ன் டிரெஸ்ஸில் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கின்றார்.

Advertisement

Advertisement